போதைப்பொருள் இல்லாத நாடு;சஜித்



பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுகிறது.இதற்குக் காரணம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டாலும் மக்களின் வரிப்பணத்தில் சிறைச்சாலைகளில் சுகபோகம் காண்பதுதான். இவ்விடயத்தில் மக்களும் போலவே அரசாங்கமும் முடிவெடுக்க வேண்டுமெனவும், ,எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியொன்றில் போதைப்பொருள் இல்லாத நாட்டை உருவாக்கி பாதுகாப்பான சிறுவர் சந்ததியை உருவாக்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், எதிர்கட்சி தலைவரின் சிந்தனையில் உதித்த பிரபஞ்ச திட்டத்தின் ஊடாக, மாணவர்களுக்கான பேருந்து வண்டியை கையளிக்கும் நிகழ்வு, இன்று நடைபெற்றது.

இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற நிகழ்வில், சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான பேருந்தை, எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமாதாச, வித்தியாலய முதல்வர் பூலோகராஜவிடம், வித்தியாலய வளாகத்தில் வைத்து கையளித்திருந்தார்.

நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமாதாச, தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வி.ஆனந்தசங்கரி மற்றும் உமாசந்திர பிரகாஸ், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


No comments