இலங்கையில் மது 55 ,புகையிலை 60!


இலங்கையில் மதுபானத்தால் 55 பேரும், புகையிலை பாவனையால் 60 பேரும் நாளாந்தம் உயிரிழக்கின்றனர் என்று புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் சமாதி ராஜபக்ஷ எச்சரித்துள்ளார்.

நாட்டின் மக்கள் தொகையில் 2021ஆம் ஆண்டில் 28 வீதத்தினர் மது அருந்தினர். மது அருந்துபவர்கள் உயர் இரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம், கல்லீரல் நோய்கள், சமிபாட்டு பிரச்னைகள், புற்றுநோய்கள் (மார்பகம், வாய், தொண்டை, உணவுக்குழாய்) போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர். இதனால், நாளொன்றுக்கு 55 பேர் உயிரிழக்கின்றனர்.

புகையிலை அதன் பாவனையாளர்களில் பாதிப் பேரைக் கொல்கிறது. புகையிலை தொடர்பான நோய்களால் ஒவ்வொரு நாளும் சுமார் 60 பேர் மரணமடைகின்றனர்.

புகையிலை, உடல்நலப் பிரச்னைகள் புற்றுநோய், இதய நோய், பக்கவாதம், நுரையீரல் நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் மற்றும் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி ஆகிய நோய்களை ஏற்படுத்துகிறது.

2016 இல் புகையிலை வரி மூலம் கிடைத்த வருமானம் ரூ. 88.5 பில்லியன் ரூபாயாகும். இதேவேளை புகையிலை தொடர்பான நோய்களுக்கான சுகாதாரச் செலவு 15.3 பில்லியன் ரூபாயாகும்.

இந்தத் தொகையில், வரி செலுத்துவோர் ரூ.8.3 பில்லியன் ரூபாயை சுமக்க வேண்டும், தனிநபர்கள் ரூ.5.9 பில்லியன் ரூபாயை செலுத்தினர் மற்றும் சுகாதார காப்பீடு ரூ. 1.1 பில்லியன் ரூபாய் என்றும் அவர் கூறினார்.

No comments