திடீர் தோசைமாவு போல்:திடீர் தீர்வாம்



சர்வகட்சி மாநாடு தொடர்பிலான இரா.சம்பந்தனது கருத்துக்களை இருட்டடித்து ஜனாதிபதி செயலகம் ஊடகறிக்கை விடுத்துள்ளது. 

எனினும்  எதிர்வரும் 75ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்திற்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வர வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதி இந்த மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த சர்வகட்சி மாநாட்டில் தெற்கிலும் வடக்கிலும் உள்ள கட்சித் தலைவர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.

அடுத்தகட்ட சந்திப்புகளை விரைவாக நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ் கட்சிகள் அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகள் விடுவிப்பு, இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு, 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை ஜனாதிபதிஹ்யிடம் எடுத்துரைத்தன.

No comments