பந்துலக்கள் ஆலோசனையில் வடமாகாணசபை!



வடமாகாண மக்களிற்கு தெற்கிலிருந்து வருகை தந்து ஆலோசனை வழங்குவது வழமையாகிவிட்டது.

ஆளுநர் ஜீவன் தியாகாராஜாவின் பங்குபற்றுதலுடன் வடக்கு மாகாண இறைவரி ஆணையாளர் பந்துல  ஹப்புதந்திரிகேவினால் முத்திரை வரி நடபடிமுறைகள் னும் தொனிப்பொருளிலான நூலொன்று   யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் பிற்பகல் 4மணியளவில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

வடமாகாண இறைவரி ஆணையாளர் பந்துல ஹப்புதந்திரகேவின் தாய்மொழி சிங்களமாக  இருந்த பொழுதும்  வடமாகாணசபையின் சட்டதிட்டங்களுக்கு அமைய குறித்த நூல்  அவரால் தமிழில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ,வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ,வடமத்திய ,வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேன,உள்நாட்டு திணைக்கள இறைவரி ஆணையாளர்,வடமத்திய மாகாண இறைவரி ஆணையாளர்,வரி ஆலோசகர்கள்,வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments