ஒதியமலை படுகொலை:38 ஆம் ஆண்டு!

 


முல்லைத்தீவு - ஒதியமலை படுகொலையின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளன.

படுகொலை இடம்பெற்று சுமார் நான்கு தசாப்தங்கள் கடந்துள்ள போதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்காத நிலைமை நீடிக்கின்றமை குறித்து தமிழ் மக்கள் கவலை கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒதியமலை எல்லை கிராமத்தில் இலங்கை படையினர் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வீடுகளில் இருந்து ஆண்களை மாத்திரம் தனியாக அழைத்துச் சென்று சுட்டுப் படுகொலை செய்திருந்தனர்.

பதவிய இராணுவ முகாமில் இருந்து 5 கிலோமீற்றர் தூரத்திலுள்ள ஒதியமலை கிராமத்திற்குள் புகுநது படுகொலையினை அரங்கேற்றிருந்தனர்.

படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

ஒதியமலை சனசமூக நிலைய வளாகத்திலுள்ள நினைவிடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுக் கற்களுக்கு மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.


No comments