ஏட்டிக்குப்போட்டியாக போராட்டங்கள்!கிராஞ்சி பகுதி மக்களின் கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 16ம் திகதி வெள்ளிக்கிழமை போராட்டமொன்றிற்கு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஏட்டிக்குப்போட்டியாக பூநகரியில் கடலட்டை பண்ணைகளிற்கு ஆதரவு தெரிவித்து போராட்டமொன்று இன்று நடாத்தப்பட்டுள்ளது.

பூநகரி பிரதேச செயலகத்திற்கு ஊர்வலமாக வருகை தந்திருந்த கடலட்டை பண்ணையாளர்கள் தமது பண்ணைகளை திரிபுபடுத்தி தகவல்கள் வெளியிடப்படுவதாகவும் தெரிவித்தனர்.

கிராஞ்சி இலவன்குடாவில் சட்டவிரோத கடலட்டை பண்ணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 76 நாட்கள் போராட்டம் இடம்பெற்று வருவதாகவும் அரசியல் தரப்புக்கள் கண்டுகொள்வதில்லை ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments