நாவிதன் வெளியில் முதலை தாக்கி மரணம்!அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கல்முனை பகுதியை இணைக்கின்ற கிட்டங்கி வாவி பகுதியில் மாடுகளை மேய்ப்பதற்காக  ஆற்றில் இறங்கிய இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி  பகுதியில்   முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறதுடன்  முதலைகளின் பெருக்கம் சம்பந்தமாக உரிய இடங்களில் அறிவுறுத்துதல்கள்  எச்சரிக்கை பலகைகள் உரிய இடங்களில் இதுவரையும் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

முதலை அபாயம் தெரியாமல்  இப்பகுதியில்  பயணிப்பதால் முதலையின் பிடிக்குள் அகப்படும் சாத்தியம் உள்ளது. 

No comments