வலம்புரி சங்குடன் கைது!வலம்புரி சங்கு ஒன்றினை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை  விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கைதான நபர்  ஆரையம்பதியை பகுதியை  சேர்ந்த 42 வயது  மதிக்கத்தக்கவர்  என்பதுடன் சந்தேக நபர்   வசம் இருந்து பல கோடி பெறுதியான வலம்புரி சங்கு ஒன்று  மறைத்து வைக்கப்பட்ட நிலையில்  விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட  சான்று பொருட்கள் யாவும்  காத்தான்குடி    பொலிஸாரிடம்  நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியதுடன் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

No comments