யாழில் பாரதிக்கு விழா எடுத்த இந்தியன் எம்பஸி!


யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் பாரதியார் விழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நல்லூர் துர்க்கா தேவி மண்டபத்தில் துணைத் தூதர் நடராஜ் ராகேஷ் தலைமையில் நடைபெற்றது.

இதில் கம்பவாரிதி இ. ஜெயராஜை நடுவராக கொண்டு பாரதி நம் நெஞ்சில் ஆழப் பதிவது - சமூகப் பாடல்களாலா ? அல்லது பக்திப் பாடல்களாலா ? என்ற பொருளில் பட்டிமன்றம் இடம்பெற்றது.

 இதில் பேராசிரியர் ஸ்ரீ பிரசாந்தன் கம்பநேசன் இ. வாசுதேவா ,  ந. விஜயசுந்தரம், செந்தமிழ்ச் சொல்லருவி ச. லலீசன் ஆகியோர் வாதிகளாகவும் பிரதிவாதிகளாகவும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் தொடக்கமாக நீர்வேலி பொன்சக்தி கலாகேந்திரா இயக்குநர் திருமதி சத்தியப்பிரியா கஜேந்திரன் அவர்களின் நெறியாள்கையில் பாரதி பாடல் நடனமும் இடம்பெற்றது.
No comments