யாழில். பாணின் விலை 10 ரூபாயால் குறைப்பு!


யாழ். மாவட்டத்திலும் பாணின் விலையை இன்றைய தினம் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் 10 ரூபாயால் குறைத்து  190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுமென யாழ். மாவட்ட  பேக்கரி உரிமையாளர் சங்கம் மற்றும் யாழ். மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகிய இரண்டும் இணைந்து அறிவித்துள்ளன. 

கடந்த சனிக்கிழமை நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலை பத்து ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பாண் விற்பனை விலை தொடர்பாக யாழ். மாவட்ட  பேக்கரி உரிமையாளர் சங்கம் மற்றும் யாழ். மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியன கூடி ஆராய்ந்த போதே இந்த முடிவு எட்டப்பட்டது.

கோதுமை மாவின் விலையை குறைக்காமல் விலைக்கழிவு தருவதாக பீறீமா நிறுவனம் தெரிவித்திருந்ததால் அந்த விலைக்கழிவு தொடர்ச்சியாக கிடைக்குமா என்கிற சந்தேகத்தில் விலையை குறைப்பது தொடர்பாக ஆராய்ந்தோமென யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்க தலைவர் க.குணரட்ணம் தெரிவித்தார்.

மேலும் டிசம்பர் 30ம் திகதி பின்னர் பாண் விற்பனை விலை மேலும் குறைக்கப்பட வாய்ப்புள்ளது என்றார்.

No comments