கடலட்டை பண்ணைக்கு எதிர்ப்பு ; அட்டை பதனிடும் நிறுவனத்திற்கு ஆதரவு!


யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் கடலட்டை பதனிடும் நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது. 

யாழ்ப்பாணத்தில் கடலட்டை பண்ணைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அ.அன்னராசா மற்றும் வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவரும் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சாமசங்களின் சம்மேளன உப தலைவருமான  நா.வர்ணகுலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

No comments