மீசாலையில் சோளன் விற்றவருக்கு திறந்த பிடியாணை!


வீதியோரமாக சோளன் விற்பனையில் ஈடுபட்ட நபருக்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்று திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது. 

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் , புத்தூர் சந்திக்கு அருகில், அவித்த சோளன் விற்பனையில் ஈடுபட்ட நபர் , பாதுகாப்பற்ற தண்ணீரில் சோளனை ஊறவிட்டு விற்றாமை , பாதுகாப்பு அங்கிகள் அணியாதமை , மருத்துவ சான்றிதழ் பெறாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன் வைத்து  சுகாதார சீர் கேட்டுடன் சோளன் விற்பனையில் ஈடுபட்டார் என மந்துவில் பொது சுகாதார பரிசோதகரால் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் சோளன் விற்பனையில் ஈடுபட்ட நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார். 

குறித்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது , சோளன் விற்பனையில் ஈடுபட்டவர் நீதிமன்றில் முன்னிலையாக தவறியமையால் , அவருக்கு எதிராக மன்று திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது. 

No comments