ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாதாம்


ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது என இந்திய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்ததில் பாலம் இருந்தது என துல்லியமாக கூற முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இராமேஸ்வரம் தலைமன்னார் இடையே உள்ள திட்டுக்களை, சிதைந்த பாலத்தின் பகுதி என்றோ, எச்சங்கள் என்றோ கூற முடியாது எனவும் , அந்த கட்டமைப்புகள் இருந்ததற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஒரு அறிகுறி இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

No comments