இறக்குமதி தடையை நீக்க நிதி அமைச்சு தீர்மானம்


உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்கள் தவிர 670 ற்கும் மேற்பட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி தடையை நீக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட அந்நிய செலாவணி பிரச்சினை மற்றும் பொருளாதார நெருக்கடியை அடுத்து 1465 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில் 670 ற்கும் மேற்பட்ட பொருட்களுக்கான தடையை நீக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 795 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் மிகுதி பொருட்களுக்கான தடையையும் நீக்குவது குறித்து பரிசீலிப்பதாக அவர் கூறியுள்ளார்.

காத்தாடிகள், மூங்கில் பொருட்கள் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடி பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டுமா என்று மக்கள் சிந்திக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நாட்டில் தாராளமாக கிடைக்கும் அல்லது உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யக்கூடிய சில பொருட்கள் இறக்குமதியை அரசாங்கம் முற்றாக தடை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments