இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு!


இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஜப்பானில் கார் இருக்கை உற்பத்தி, தையல் வேலைகளுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பத்தரமுல்லையில் உள்ள SLBFE தலைமைக் காரியாலயத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தகுதியானவர்களை பதிவு செய்யுமாறும் கோரப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்கள் தேசிய அடையாள அட்டை, பாடசாலை வெளியேறும் சான்றிதழ், G.C.E உயர்தர சான்றிதழ் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் ஆகியவற்றைக் கொண்டு வருமாறும் கோரப்பட்டுள்ளது.

No comments