மண்டூஸால் குருநகரில் 30 மீனவர்களின் படகுகள் சேதம்!


மண்டூஷ் சூறாவளி காரணமாக தமது  30 படகுகள் சேதமடைந்துள்ளதாக குருநகர் மீனவர்கள் தெரிவித்துள்னர். 

மேலும் தெரிவிக்கையில், 

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால், கடல் அலைகளின் தாக்கத்தால்,  தமது 30க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளது. ஒரு படகு முற்றாக கடலில் மூழ்கியுள்ளது.

படகுகள் சேதமடைந்துள்ளமையால், மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சேமடைந்த படகுகளை திருத்துவதற்கான பொருளாதார ரீதியாக  வசதி இல்லை,

எனவே அரசாங்கம் நட்ட ஈடு வழங்க வேண்டுமென என கோரியுள்ளனர். 

No comments