தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் முதலிடத்தை பெற்றதை கொண்டாடிய யாழ்.மாவட்ட செயலகம்!


தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டமைக்கான கௌரவிப்புவிழா   யாழ் மாவட்ட செயலக  கணக்காளரும் நலன்புரிக் கழகத்தின் தலைவருமான திரு. அ. நிர்மல்  அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை யாழ் மாவட்ட செயலக கேட்போா்  கூடத்தில் நடைபெற்றது.

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் 2020 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட   அரச திணைக்களுக்கிடையிலான தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் பங்குபற்றி யாழ் மாவட்ட செயலகம்  தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டமையை முன்னிட்டு , இந் நிகழ்வு நடைபெற்றது.  

இதன்போது கருத்து தெரிவித்த யாழ்.மாவட்ட செயலர் க.  மகேசன் ,  அர்ப்பணிப்பான வினைத்திறன் மற்றும் விளைதிறனான செயற்பாட்டாலும், மக்களுக்கு வழங்கிய உன்னதமான சேவையினாலும் இந்த வெற்றி கிடைக்கப் பெற்றதாக தெரிவித்தார்.   

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் , மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பதவி நிலை உத்தியோகத்தர்கள் , யாழ்ப்பாண 

மாவட்ட செயலக உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக  உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
No comments