துருக்கியில் மத போதகருக்கு 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை!


துருக்கி அங்காராவில் செயற்படும் பிரபல ஆன்லைன்  தொலைக்காட்சியான ஏ9 வழிநடத்திய மதபோதகருக்கு 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

66 வயதாகும் இஸ்லாமிய மத போதகர் அட்னான் ஒக்டர் ((Adnan Oktar)), கவர்ச்சி உடையணிந்த பெண்கள் சூழ்ந்து நடனமாடியபடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றினார்.

மத உணர்வுகளை புண்படுத்துதல், பாலியல் துன்புறுத்தல், ஆயுதமேந்திய அமைப்பை நிர்வாகித்தல் உட்பட பல குற்ற வழக்குகள் அட்னான் ஒக்டர் மீது சுமத்தப்பட்டிருந்தன.

கடந்த ஆண்டு அவர் மீது பாலியல் வன்கொடுமை, அரசியல் மற்றும் இராணுவ உளவு முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் படி 1,075 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், மேல்முறையீட்டில் அக்தார் உட்பட மேலும் 10 பேருக்கு 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, இஸ்தான்புல் உயர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அனைத்து வழக்குகளையும் சேர்த்து அவருக்கு 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


No comments