உலகக் கோப்பைப் புறக்கணியுங்கள்!! தீவிரமடையும் போராட்டங்கள்!


கட்டாரில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை உதைபந்தாட்டப் போட்டியை புறக்கணிக்குமாறு கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

உதைபந்தாட்ட ரசிகர்கள், விளையாட்டுக் கழகங்கள், விளைாயட்டு வீரர்கள் என அனைவரும் கட்டாரை புறக்கணியுங்கள் எனக் கோரியுள்ளனர். அது தற்போது பெரும் பேரணியாக மாறியுள்ளது.

கட்டாரில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், சுற்றுச்சூழல் முன்னிலைப்படுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஜேர்மனி மைன்ஸில் நடைபெற்ற புண்டஸ்லீகா போட்டியில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கட்டாரைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தி விளையாட்டு அரங்கில் மிகப்பொிய பதாதையை உதைபந்தாட்ட ரசிகர்கள் தாங்கியிருந்தார்கள்.

உலக்கோப்பை நெருங்க நெருங்க கட்டாரைப் புறக்கணிக்குமாறு கோரும் பரப்புரைகளும் தீவிரமடைந்துள்ளன.  

அமெரிக்க நீதித்துறை, ஃபிஃபா பிரதிநிதிகளுக்கு வாக்குகளுக்காக லஞ்சம் கொடுப்பதில் கத்தார் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியது. இக்குற்றச்சாட்டை கட்டார் கடுமையாக மறுத்தது.

No comments