மாதகல் சேந்தாங்குளத்தில் கஞ்சா மீட்பு!


இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல்  சேந்தாங்குளம் பகுதியில் கஞ்சா 49 கிலோக்கிராம் கஞ்சா பொதிகளும் படகு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

இராணுவ புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இவ்வாறு கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த கஞ்சா பொதிகளை இளவாலை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

செய்தி: பு.கஜிந்தன்

No comments