யாழில் உலக மீனவ எழுச்சி தினம்!



உலக மீனவ எழுச்சி தினமும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வெள்ளி விழாவும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு சிறு மீனவர் ஆண்டாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே சிறு மீனவ மக்களின் பாதுகாப்பிற்கும், தொழில் உரிமைக்கும், வாழ்வாதரத்தை உறுதிப்படுத்துவதற்கும். தொடர்ந்து குரல் கொடுப்போம் என அதன் பிரதிநிதிகள் யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தனர்.

➢ நீல நிஞாயத்துவத்தையும் உணவுத் தன்னாதிக்கத்தையும் நிலைநாட்டுவோம்

➢ சிறு மீனவத் தொழிலையும் சிறு மீனவனையும் பாதுகாப்போம்

➢ சட்ட விரோத மீன்பிடிமுறையை முற்றாக தடுத்து நிறுத்துவோம்

➢ சிறு மீனவனின் வாழ்விடங்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்போம்

➢ அபிவிருத்தி என்று கூறி சிறு மீனவனின் தொழிலை இல்லாமல் செய்வதை தடுத்து நிறுத்துவோம்

➢ சிறு மீனவனின் வாழ்வாதாரத்தையும் வளங்களையும் அழிப்போரை துணிவுடன் எதிர்த்து நிற்போம்.

➢ கடல் அட்டை பண்ணை என்றும், நன்னீர் மீன்வளர்ப்பு என்றும், இறால் பண்ணை என்றும், காற்றலை மின்பிறப்பாக்கி என்றும், துறைமுக அபிவிருத்தி என்றும் கூறிக் கொண்டு எமது பாரம்பரிய மீன்பிடித் தொழிலை அழிப்பதை தடுப்போம்

➢ சிறு மீனவப் பெண்களின் வாழ்வாதாத்தை அழித்து அவர்களை அடிமைகள் ஆக்கும் கைங்கரியத்தை முறியடிப்போம்

➢ மீனவப் பெண்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வோம்

➢ சிறு மீனவரின் வாழ்வாதாரத்தை அழித்து அவர்களை அடிமைகள் ஆக்கும் சூழ்ச்சிகளை முறியடிப்போம்

➢ சிறு மீனவர்களை அச்சுறுத்தும் சட்ட விரோத மீன்பிடியாளர்களை மீன்பிடித் தொழிலிருந்து அகற்றுவோம்

➢ பத்து வருடத்தின் பின் கடலில் மீன் பிடிக்க முடியாது என்று கூறி சட்ட விரோத பண்ணைத் தொழிலை ஊக்குவிக்கும் பொய்யர்களிடமிருந்து மீன்பிடித் தொழிலைப் பாதுகாப்போம்

➢ அபிவிருத்தியின் பின்; மயிலிட்டித்துறைமுகம் மயிலிட்டி மீனவ மக்களுக்கு சொந்தம்; இல்லை என்பது இன்றைய கதை.

நாளை பருத்தித்துறைத் துறைமுகம் அபிவிருத்தியின் பின் யாருக்குச் சொந்தம்

➢ கரையோரப் பாதுகாப்பு என்ற போர்வையில் மீனவ மக்களின் காணிகளை அபகரிக்கும் கபடத்தனத்தை முறியடிப்போம்

➢ சுற்றுலாத்துறை என்ற போர்வையில் சிறு மீனவனின் வயிற்றில் அடிக்கும் தனவாதிகளுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம்.

➢ ஒரு நாள் மீன்பிடித் தொழிலுக்கு செல்வதற்கும் 30 லீற்றர் எண்ணெய் ஒரு மாதம் செல்வதற்கும் 30 லீற்றர் எண்ணையா?

➢ சிறு மீனவனையும் கடல் வளத்தையும் பாதிக்கும் இழுவை மடித் தொழிலை தடுத்து நிறுத்துவோம்

➢ கரையோர மீனவ மக்களின் தொழிலையும் வாழ்விடங்களையும் உறுதிப்படுத்துவோம் என பிரதிநிதிகபள் தெரிவித்தனர்.

ஊடக சந்திப்பில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம்,கிராமிய உழைப்பாளர் சங்கம், மாவட்ட பூந்தளிர் பெண்கள் அமைப்பு, மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் மாற்றத்திற்கான மாவட்ட இளைஞர் பேரவை ஊடகச்சந்திப்பில் பங்கெடுத்திருந்தன.


No comments