காரைநகரில் காணிப்பிடிக்கிறார் ரணில்!



வடக்கில் முப்படைகளிற்கான காணிகளை சுவீகரிப்பது தொடர்பில் எழுந்து சர்ச்சைகளையடுத்து தனது யாழ்ப்பாண பயணத்தின் போது ஆராயவுள்ளதாக இலங்கை ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கை இராணுவத்தினருக்கான காணி சுவீகரிப்பதற்கு காரைநகரில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளிற்கு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இன்றையதினம் காரைநகர் பகுதியில் 44 தமிழ் குடும்பங்களுக்கு சொந்தமான 11 ஏக்கர் காணிகளை இராணுவத்திற்கு அளவிடுவதற்கு உள்ளுர் மக்கள் தமது  எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து காணியை அளவிடுவதற்கு வருகை தந்திருந்த நில அளவை திணைக்களத்தினர் மக்களின் எதிர்ப்பையடுத்து அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.

நாங்கள் சொந்த காணிகள் இல்லாமல் வாடகை வீடுகளிலும் முகாம்களிலிருந்தும் மழையிலும் வெள்ளத்திலும்; அல்லல்படுகின்றோம். எங்களது அவல நிலையை கருத்தில் கொள்ளாது ஆக்கிரமித்துள்ள இராணுவத்தினருக்கு காணிகளை அளவிடுவதற்கு முயற்சிக்கின்றனர். இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என போராட்டத்தில் திரண்டிருந்தவர்கள் குரல் எழுப்பியிருந்தனர்.


No comments