நீதி கோரி களத்தில் யாழ்.ஊடக அமையம்!


ஊடகவியலாளர்களிற்கு எதிரான குற்றங்களிற்கான தண்டனை இன்மையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு

விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் மத்திய பேரூந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.ஊடக அமையத்தின் பெருமளவிலான ஊடகவியலாளர்கள் திரண்டு துண்டுபிரசுர விநியோகத்தில் ஈடுபட்டிருந்தனர்.

படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களிற்கான நீதி கோரிய நீண்ட பயணத்தை யாழ்.ஊடக அமையம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments