உயிரிழந்த சாரதி உடுப்பிட்டி! வவுனியா நொச்சிமோட்டை பலத்துக்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த சாரதி உடுப்பிட்டியை சேர்ந்த ரூபன் (30வயது) என டையாளம் காணப்பட்டுள்ளார்.

இரவு 12.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.  

இந்த விபத்தில் காயமடைந்த 17 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. 


No comments