கொள்ளையிட்டுவிட்டு நடந்து சென்ற திருடன்!

 
கனடா - மிசிசாகாவில் வங்கி ஒன்றில் நடந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில்  சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிசிசாகாவைச் சேர்ந்த 30 வயதான தாமிரன் அமிர்தகணேசன் என்ற இலங்கையைச் சேர்ந்த தமிழரே கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இம்மாதம் 23ம் திகதி இடம்பெற்ற இந்த கொள்ளைச் சம்பவத்தில் சந்தேகநபர் வங்கியை விட்டு வெளியேறி கால்நடையாக தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவான குற்றவியல் விசாரணைக்குப் பிறகு சந்தேக நபர் மறு நாள் அடையாளம் காணப்பட்டதாக அறியப்படுகிறது.

மாறுவேடமிட்டு கொள்ளையடித்ததாக சந்தேகநபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

No comments