கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்திற்கு அருகில் பதற்றம்
யாழ். கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்பாக சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் குறித்த பகுதியில்
கடமையில் ஈடுபட்ட இராணுவத்திற்கும் இடையே வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
மாவீரர் வாரத்தினை முன்னிட்டு கோப்பாய் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்பாக உள்ள பகுதியில் இன்றையதினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் சிரமதான பணியில் ஈடுபட்ட போதே குழப்ப நிலை தோன்றியுள்ளது.
இதேவேளை குறித்த பகுதியில் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர் .
செய்தி:பு.கஜிந்தன்
Post a Comment