மொறிஸியஸில் சிவசேனை மாவீரர்களிற்கு அஞ்சலி!மொரிஸியசில் உள்ள மாவீரர் நினைவேந்தல் தூபியில் அஞ்சலி செலுத்தியுள்ளார் ஈழம் சிவசேனை தலைவர் மறவன்புலோ சச்சிதானந்தன்.அவருடன் கூடவே தமிழகத்தை சேர்ந்த இந்து மக்கள் கட்சி  தலைவரும் இணைந்து நினைவேந்தலில் பங்கெடுத்துள்ளார்.

தனது நினைவுகூரலை  பற்றிகருத்து வெளியிட்டுள்ள மறவன்புலோ சச்சிதானந்தன்

 "அவர்கள் மாவீரர்கள்

இலக்கை அடைய இறப்பைப் படைக் கலனாக்கியோர்.

உயிர்ப்புள்ள நாடு காண உடலை ஈந்தோர்.

மொரிசியசு நாடு.

உரோசுக் குன்று Rose Hill.

நகராட்சி வளாகப் பூங்கா.

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண்.

அஞ்சா நெஞ்சம் அடையாளமான

மஞ்சள் சிவப்பு வண்ணத்திற்கு

நெஞ்சம் நெகிழ அஞ்சலித்தேன்."No comments