அரசை விற்கவேண்டாம்!



அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே கோரிக்கை விடுத்துள்ளார்.


எந்தவொரு தனியார் மயமாக்கலையும் முன்னெடுப்பதற்கு முன்னர் அரசாங்கம் தெளிவான வேலைத்திட்டம் ஒன்றைத் தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் தெரிவித்துள்ளார்.


அரச வளங்களை தனியார் மயமாக்குவதை தாங்கள் எப்போதும் எதிர்ப்பதாகவும் தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமையைக் கருத்திற்க் கொண்டு சில தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


இது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் செயலாளர், பிரதமர் மற்றும் தமக்கு இடையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அண்மையில் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments