மாவீரர் துயிலுமில்ல சிரமதானம் பணிகள்: அச்சுறுத்திய காவல்துறை


மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில், மாவீரர் தின ஏற்பாட்டில் இன்று (06) காலை சிரமதானப் பணிகள் இடம்பெற்ற போது, ​​அங்கு சென்ற அடம்பன் பொலிஸார், சிரமதானம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதோடு, மாவீரர் தின நினைவேந்தல் நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சுறுத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் தின நினைவேந்தல் இடம்பெறவுள்ள நிலையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டு, மாவீரர் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டது, இறுதி நாளான 27ஆம் திகதி மாலை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில்,மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவினர், இன்று (06) காலை சிரமதானப் பணிகள் இடம்பெற்றன.

அந்த சிரமதான நிகழ்வில் மாவீரர்களின் உறவினர்களும் கலந்துகொண்டிருந்த நிலையில், சிரமதானம் முடிந்த சந்தர்ப்பத்தில் துயிலும் இல்ல பகுதிக்கு வந்த அடம்பன் அதிகாரிகள் சிரமதானம்  மேற்கொண்டமை குறித்து விசாரணைகளை மேற்கொண்டனர்.No comments