இலங்கை கடற்படை கையை உடைத்தது!



இலங்கை கடற்படையினர் தன்னை கடுமையாகத் தாக்கி தனது கையை உடைத்ததாக தமிழக மீனவர் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

தமிழக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில்  அவர் தனது உடைபட்ட கையை காட்டி அதனை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்.

தனது படகிற்குள் நுழைந்த இலங்கை கடற்படை ஏனையவர்களை மெதுவாக தாக்கி பின் தன்னை மிகவும் கடுமையாகத்  தாக்கியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டை இலங்கை கடற்படையினர் நிராகரித்துள்ளனர்.

No comments