முப்படைகளிற்கு தண்டமாக நிதி!



இலங்கை அரசாங்கத்திடம் முறையான திட்டங்கள் இல்லை என்பதால் அடுத்த வருடமும் பணத்தை அச்சிட வேண்டிய நிலையே ஏற்படுமென எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடுகளை குறைக்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் நூற்றுக்கு 200 - 300 சதவீதத்தால் அதிகரித்துள்ளன. நாட்டின் வருமானத்தை அதிகரிக்க வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில்,  வரிகள் ஊடாகக் கிடைக்கும் வருமானம் 11 சதவீதமாக அதிகரிக்கும் என அரசாங்கம் கூறுகிறது. இது பகல் கனவாகும்.  இதனை செய்யவே முடியாது எனவும் தெரிவித்தார்.

செலவுகளைக் கருத்திற்கொண்டு அத்தியாவசிய தேவைகளை மக்கள் நிறுத்துவார்களாக இருந்தால், பாதுகாப்புத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் செலவுகளையும் குறைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments