யாழில் தட்டுப்பாடு!



யாழ்ப்பாணத்தில் தற்பொழுது தட்டுப்பாடு காரணமாக ஹெரோயின் போதைப் பொருளின் விலை அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் போதை  பாவனை தடுப்பு கூட்டத்தில்  கருத்து வெளியிடுகையில் அண்மைய நாட்களில்  ஹெரோயின் பாவனையாளர்களை அதிகளவில் கைது செய்யப்படுவதன் காரணமாக தற்பொழுது யாழ் நகரில் ஹெரோயின் போதைப் பொருளின் விலை அதிகரித்துள்ளது .விலை தற்போது மும்மடங்காகியுள்ளது.

ஹெரோயின் விற்பனையாளர்கள் ஹெரோயின் பாவனையாளர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படும்போது விலை அதிகரிப்பு இடம் பெறும்.  அத்தோடு யாழ்ப்பாணத்தில் கஞ்சா விநியோகம் தற்பொழுது முற்று முழுதாக நிறுத்தப்பட்டுள்ளது

அத்தோடு பாடசாலைகளில் போதை பொருள் பாவணையுடன் தொடர்பட்ட மாணவர்களே அடையாளம் காணும் போது அந்த மாணவர்களை உடனடியாக பாடசாலையிலிருந்து வெளியேற்றிவிடுவதாகவும் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே யாழில் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு கல்வித்திணைக்களம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதில்லை என சாவகச்சேரி வைத்திய சாலை வைத்திய நிபுணர் அ,வினோதா தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக போதை பொருள் பாவனை தொடர்பில் பல கூட்டங்கள் இடம் பெறுகின்ற போதிலும் அந்த கூட்டங்களுக்கு கல்வி திணைக்கள அதிகாரிகள் வருவதில்லை .அதே போல் பாடசாலைகளில் இருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கின்றன ஆனால் அந்த முறைப்பாடுகளுக்குரிய நடவடிக்கைகள் கல்வித் திணைக்களத்தினர் எடுக்கப்படுவதில்லையெனவும் மருத்துவர் வினோதா தெரிவித்துள்ளார்.


No comments