இடிபாடுகளிற்குள்ளும் எழுகிறது ஈழம்!

 


தமிழீழ தேசம் மாவீரர் தின நினைவேந்தலிற்கு நெருக்குவாரங்களின் மத்தியில் தயாராகிவருகின்றது.

இந்நிலையில் மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்ட மேடை உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக தரவை மாவீரர் தின ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

நேற்று நாங்கள் மாவீரர் துயிலும் இல்லத்தில் மேடையொன்றை அமைத்திருந்தோம். இன்று காலை நாங்கள் சென்று பார்த்தபோது குறித்த மேடை விசமிகளினால் உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டிருந்தது.

அத்துடன் அங்கிருந்த அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தன. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என்று தொடர்புடையவர்களை  கேட்டுக்கொள்கின்றோமென ஏற்பாட்டுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.. 

அதேபோன்று மாவீரர் நாளை முன்னிட்டு இரத்ததான முகாம் ஒன்று முல்லைதீவு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 09 மணி முதல் முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கியில் இந்த இரத்ததான முகாம் இடம்பெற்றுள்ளது.

எனினும் அங்கும் சிவில் உடையில் புலனாய்வு பிரிவினர் அச்சுறுத்தும் வகையில் இரத்த தானத்தில் ஈடுபட்டவர்களை புகைப்படம் பிடித்ததாக தெரியவருகின்றது..


No comments