ரணில் மீண்டும் நரி வேலையில்!


தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒற்றுமையாக பேச்சிற்கு வருமாறு ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளமை பிரச்சாரமாக கருதப்படுகின்றது.

ரணில் விக்ரமசிங்க, தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்துப் பேச வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கூறியதுடன் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் அழைப்பும் விடுத்திருந்தார்.

ரணில் விக்ரமசிங்கவின் அழைப்புத் தொடர்பாக உரையாடுவதற்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்குத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்தார். ஆனால் பங்காளிக் கட்சிகள் அதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளன.

ஏம்.ஏ.சுமந்திரனின் அழைப்பும் பங்காளிக் கட்சிகளின் மறுப்பும் தமிழ் தரப்புக்களிடையே ஒற்றுமை இல்லை என்ற கருத்துக்கு மேலும் வலுச் சேர்த்திருப்பதாக சொல்லப்படுகின்றது.

பேச்சிற்கு செல்ல முன்னரே சமஸ்டி அடிப்படையிலேயே தீர்வு முன்வைக்கப்படவேண்டுமென அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைமை கூறியுள்ளது.

மறுபுறம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசியல் தீர்வை கூட்டமைப்பின் மற்றொரு பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலைக்கழக தலைமை வலுயுறுத்திவருகின்றது.

எனினும் பங்காளிக்கட்சிகளில் மற்றைய பங்காளியாக தமிழீழ விடுதலை இயக்கம் தொடர்ந்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேரடியாக உறவை பேணிவருகின்றது.

இந்நிலையில் தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒற்றுமையாக பேச்சிற்கு வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள அழைப்பு சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.


No comments