பிள்ளையான்-அருண் புதிய கூட்டு!

 


வடக்கு தரப்புக்கள் மீது என்றுமே வெறுப்பை காட்டும்  பிள்ளையான் தற்போது கஞ்சா வியாபாரி அருண் சித்தார்த்துடன் கூட்டு சேந்துள்ளார்.

இலங்கையில்  சட்டங்கள்  மோசமாக இருக்கின்றன. அதே போல  சட்டத்துக்கு புறம்பான ஆட்சியும் நடைபெறுகின்றது. இவ்வாறான சட்டத்துக்குப் புறம்பான ஆட்சியை நீதிமன்றங்களும் அங்கிகரிக்கின்றன. 

இந்த  சட்டத்திற்குப் புறம்பாக இயங்குதலானது  சட்டக் கலாச்சாரத்தில் ஒர் பிரித்தறிய முடியாத அங்கமாகி இருக்கின்றது.

இதற்கு இந்த படம் ஒரு சாட்சி  .

யாழ்ப்பாணத்தில் வழக்கு இலக்கம்  MC Court 292/17 இன் போதைவஸ்து கடத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டு இருந்த  இராணுவ புலனாய்வாளர்  அருண் சித்தார்த் என்கிற நபரும் கொலை , கடத்தல் , கற்பழிப்பு, காணி மோசடி ,மணல் வியாபாரம் என வரையற்ற  குற்றங்களை செய்த இராணுவ ஒட்டுக்குழுவை சேர்ந்த பிள்ளையான் என்கிற நபரும் சுதந்திரமாக நடமாட இங்கே அனுமதி இருக்கிறது . இந்த குற்றவாளிகள் அரசியல் பேச முடியும் . அதிகாரத்திற்கு வர முடியும் . சட்டங்களை உருவாக்கும்  பாராளமன்றத்தின் ஒரு  உறுப்பினராக கூட முடியும் .ஏன், அமைச்சராக வர கூட முடியும் 

இவ்வாறான குற்றாவளிகளை அதிகாரத்தில் சுதந்திரமாக நடமாட வைத்து கொண்டு. 70 ஆண்டுகளாக போதைவஸ்து ஒழிப்பு குறித்து பேசுகின்றார்கள் . 

No comments