வவுனியா வடக்கு நெடுங்கேணியில் கைக்குண்டு மீட்பு!


வவுனியா வடக்கு, நெடுங்கேணிப் பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று (04) தெரிவித்துள்ளனர்.

வவுனியா வடக்கு, நெடுங்கேணி, ஒலுமடுப் பகுதியில் வீதியோரமாக உள்ள காட்டுப் பகுதிக்கு சென்ற நபர் ஒருவர் குறித்த வீதியோரத்தில் கைக்குண்டு ஒன்று இருப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நெடுங்கேணி பொலிஸார், விசேட அதிரடிப் படையினரின் துணையுடன் குறித்த கைக்குண்டை மீட்டெடுத்ததுடன், அதனை செயலிழக்கச் செய்துள்ளனர். 

குறித்த கைக்குண்டானது யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஜே.ஆர் வகைக் குண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்தி: ஜெகதீஸ்வரன் டிஷாந்த் 

No comments