யாழ்-தென்மராட்சியில் நெற்செய்கை வெள்ளத்தால் அழிவு!


தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக தென்மராட்சி தெற்கு பிரதேசத்தில் பல ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கை வெள்ளத்தால் அழிவடைந்துள்ளது என நெற்செய்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்

தென்மராட்சி தெற்கு பிரதேசத்தின் அறுகுவெளி, தனங்களப்பு, மறவன்புலவு, கோவிலாக்கண்டி போன்ற இடங்களில் பல ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த வருடம் போதியளவு உரவகைகளும் கிடைக்கப்பெற்றன. ஆயினும் இயற்கையின் சீற்றத்தால் எமது பயிர்கள் அழிவடைந்துள்ளன

சாவகச்சேரியிலிருந்து தனன்களப்பு செல்லும் வீதியின் இரண்டாவது கிலோமீற்றர் தூரத்தில் உள்ள வெள்ளநீர் வழிந்தோடும் மதகு வீதி புனரமைப்பின்போது மூடப்பட்டமையாலேயே மழைநீர் வழிந்தோட முடியாமல் தேங்கி பயிர்கள் அழிவடைந்துள்ளன

இதுதொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம்செலுத்தி எமக்கு இழப்பீடு பெற்றுத்தர வழிவகை செய்யவேண்டும் – என்றனர்.

செய்தி: லஜிதரன்

No comments