மாவீரர் குடும்பங்களை கௌரவிக்க திட்டம்!மாவீரர்களது தியாகங்களை போற்றும்வகையில் பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர்களது பெற்றோர்களை வீடுகள் தோறும் தேடிச்சென்று கௌரவிக்கும் முயற்சியொன்றை ஆரம்பித்துள்ளனர்.மாவீரர்களது பெற்றோரது வீடுகளிற்கு செல்லும் பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகள் அவர்களை கௌரவிக்கவுள்ளனர்.

இதனிடையே கிழக்கில் மட்டக்களப்பு கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் காட்சிப்படுத்தப்பட்ட மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் பதாதை இன்று காலை இனம் தெரியாத நபர்களினால் அகற்றப்பட்டுள்ளது.

எனினும் மீண்டும் பதாதைகள் கிரான் பிரதான வீதியின் சுற்றுவளைவு மையப் பகுதியில் இன்று காலை இரண்டு பக்கங்களிலும் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவுகள்,பொதுமக்கள், மற்றும் ஏற்பாட்டுக் குழவினர் சிரமதானப் பணியினை மேற்கொண்டதுடன் நினைவுப் பதாதையும் காட்சிப்படுத்தப்பட்டு நினைவுச் சுடரும் ஏற்றியிருந்தனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டிற்கு பின்னர் 3 வருடங்கள் கடந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடுகள் தரவை,மற்றும் வாகரை போன்ற இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.எதிர்வரும் 27 ஆம் திகதி கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில்  மாவீரர் நினைவேந்தல்முன்னெடுக்கப்பட்டுள்ளது.No comments