புத்தருக்கு சரி:முருகனுக்கு இல்லை!
பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் அமைக்கப்பட்டு வந்த 18 அடி உயரமான முருகன் சிலை நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
வன ஜீவராசிகள் திணைக்களம் இந்த தடை உத்தரவை பிறப்பித்து இருப்பதாக ஆலய வண்ணக்கர் தெரிவித்தார்.
அத்திவாரம் அமைக்கப்பட்டு பீடம் எழுப்பப்பட்ட நிலையில் இத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதமளவில் வள்ளிஅம்மன் மலையில் வள்ளியம்மன் ஆலயத்திற்கு பின்னால் 18 அடி உயரமான முருகன் சிலை அமைப்பதற்கு அடிக்கல் நட்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பமானது. இருந்த போதிலும் ஜூலை மாதமளவில் பணியை நிறுத்துமாறு வனஜீவராசிகள் திணைக்களம் அறிவித்தது.
ஆரம்பத்தில் மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் அனுமதி பெறப்பட்டது. தற்போது கொழும்பு தலைமையகத்தில் இருந்து இத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முற்பட்ட இந்த ஆலயம் மலைகளாலும் மரங்களாலும் சூழப்பட்ட ஒரு பழமையான ஆலயம் . ஆலய வளாகத்தில் உள்ள வள்ளியம்மன் மலையில் முருகன் சிலை அமைக்கப்பட்டு வந்தது .
Post a Comment