இந்தியாவே முட்டுக்கட்டை:டக்ளஸ்!யாழ்ப்பாணம் சர்வதே விமான நிலையத்தை இயக்குவதில் சிக்கல் என மீண்டும் டக்ளஸ் தெரிவித்துள்ளார்,

 யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை இறக்க இந்தியா விரும்பவில்லை என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

 யாழ்ப்பாணம் விமான நிலையம் திறக்கப்பட்டு , மூன்று வருடங்கள் கடந்தும் அது இயங்காமல் உள்ளமை குறித்து கேள்வியெழுப்பியபோது பதிலளித்த அமைச்சர், யாழ்ப்பாணம் விமான நிலையம் இயங்குவதற்கு தயாரான நிலையிலையே உள்ளது. ஆனாலும் அங்கு விமானங்கள் வர தயாரில்லை. குறிப்பாக இந்திய விமானங்கள் அங்கு தரையிறங்க தயார் இல்லை. அதனாலேயே விமான நிலையம் இயங்காத நிலையில் உள்ளது என்றார்.

இந்திய விமான நிறுவனங்கள் தமது விமானங்களை யாழ்ப்பாணத்தில் தரை இறக்க தயார் எனில் ஒரு இரவில் விமான நிலையத்தை இயங்க வைக்க என்னால் முடியும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.


No comments