வல்லையில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு

அச்சுவேலி வல்லை பாலத்தின் கீழ் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இளைஞன் நேற்றிரவு நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 கடற்படை சுழியோடி பிரிவினருக்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இன்று காலை தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது காணாமல் போன இளைஞன் கற்பாறைக்குள் சிக்குண்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை புத்தூர் கலைமதி பகுதியில் இருந்து அச்சுவேலி வல்லை பாலத்தின் கீழ் மீன்பிடி நடவடிக்கைக்கு ஐந்து பேர் கொண்ட இளைஞர்கள் வந்து, பாலத்தின் கீழ் பகுதியில் இருந்து மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். 

இதன்போது மீனவர் ஒருவரின் செருப்பு தண்ணீருக்குள் விழுந்து உள்ளது.

செருப்பினை எடுப்பதற்கு ஆழங்கூடிய பகுதியில் இறங்கிய பொழுது 19 வயதான பாஸ்கரன் லக்சன் என்ற இளைஞன் நீரில் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.No comments