சாப்பாட்டு காசே கொடுக்காமல் பஸில் எங்கேப்!
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) பிரமுகர் ஓய்வறையை பயன்படுத்திய முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ விஐபி சேவைகளைப் பயன்படுத்தியதற்கான கட்டணத்தையும் அவரை வரவேற்க வந்த விருந்தினர்ககளுக்கு வழங்கப்பட்ட உணவுக்கான கட்டணத்தையும் இன்னும் செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பசில் அமைச்சராகவோ அல்லது பாராளுமன்ற உறுப்பினராகவோ இல்லாத நிலையில், BIA இன் பிரமுகர் ஓய்வறையைப் பயன்படுத்துவதற்கு அவருக்கு உரிமை இல்லை, மேலும் அவரை வரவேற்க வந்தவர்களில் பெரும்பாலோர் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் நிதஹஸ் சேவக சங்கமய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பசில் ராஜபக்சவின் பிரமாண்ட வருகைக்காக BIA இன் விஐபி லவுஞ்சிற்கு உணவு வழங்கியதை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கேட்டரிங் சேவை அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர் , ஆனால் அவர்கள் இன்னும் இந்த உணவுக்கான கட்டணத்தை விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் இருந்து பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது .
பசில் BIA இல் கோல்ட் ரூட் சேவையை பயன்படுத்தியிருந்தார் , இந்த VIP சேவையைப் பயன்படுத்துவதற்கு ஒரு நபருக்கு 200 அமெரிக்க டொலர்களுக்கு மேல் செலவாகும்.
லவுஞ்சில் இரண்டு அறைகள் உள்ளதாகவும், குறைந்தது 100 பேர், பெரும்பாலும் SLPP யைச் சேர்ந்தவர்கள், பசிலை வரவேற்க கோல்ட் ரூட் சேவையில் கூடியிருந்ததாகவும், VIP கார் பார்க்கிங்கும் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .
பணம் செலுத்தாமல் பசில் ராஜபக்ஷவும் அவரது பரிவாரங்களும் விஐபி ஓய்வறை பயன்படுத்தியதை BIA இன் உள் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன , மேலும் பசில் மற்றும் அவரது SLPP கட்சி பயன்படுத்திய சேவைகளுக்கு யார் பணம் செலுத்துவார்கள் என்பதற்கு யாரிடமும் பதில் இல்லை.
இந்த ஆண்டு நடுப்பகுதியில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து பசில் ராஜபக்ச செப்டம்பரில் அமெரிக்காவுக்குப் புறப்பட்டார் மற்றும் ஜூன் மாதம் அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment