சுமந்திரனின் தனிப்பட்ட தீர்மானங்கள் தமிழ்த் தேசியத்தை வலுவிலக்கச் செய்கிறது - தவராசா



தமிழ் தேசியம் சாராதவர் தலைமை தாங்கினால் வெளியேறுவேன் - சுமந்திரனின் தனிப்பட்ட தீர்மானங்கள் தமிழ் தேசியத்தை வலுவிளக்கச் செய்கிறது. தமிழரசு கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவர் சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவிப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலத் தலைமைப் பதவிக்கு தமிழ் தேசியம் சாராத ஒருவர் வருவாராயின் தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவேன் என தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மத்திய குழு உறுப்பினருமான சட்டத்தரணி கே.தவராசா தெரிவித்தார்.

இன்று, ஞாயிற்றுக்கிழமை காலை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதை அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் தமிழ் கூட்டமைப்பில் இருக்கின்ற ஒருவரின் முடிவை தமிழ் கூட்டமைப்பின் முடிவாக ஏற்றுக் கொள்ள முடியாது.

நான் தமிழரசு கட்சியில் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக அங்கம் வகிக்கின்ற நிலையில் தமிழரசு கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜா  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஆகியோரிடம்  எவ் விதமான சலுகைகளையும் இதுவரை கேட்டதிலை.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நான் உதவி செய்துள்ளேன்  எந்தவிதமான சலுகைகளையும் பதவிகளையோ கேட்டுப் பெற்றுக் கொண்டதில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் முடிவுகளை எடுக்கும்போது கூட்டு பொறுப்பு காணப்படுவதில்லை மாறாக ஒருவர் முடிவெடுத்து விட்டு அதனைச் செய்யும்படி கூறுவது தான்தோன்றித்தனமான செயலாகும்.

அண்மையில் பாராளுமன்றத்தில் இடம் பெற்ற 22 ஆவது திருத்தத்தின் போது சுமந்திரன் வாக்களிப்பிலிருந்து விலகி இருந்தார் அதற்கு காரணத்தையும் ஊடகங்களுக்கு கூறி இருந்தார்.

அதே சுமந்திரன் கடந்த ஒரு வாக்களிப்பின் போது வாக்களிக்க முடியாதவர்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள் என கூறி இருந்தார்.

நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன் சுமந்திரன் நினைக்கிறார் தான் எடுக்கும் முடிவுகளுக்கு ஏனையோர்  வாக்களிக்க வேண்டும் காட்சி எடுக்க முடிவுகளுக்கு மட்டும் தான் வாக்களிக்க முடியாது என எண்ணுகிறார் போலும்.

அது மட்டும் அல்ல அது சில கட்சியினுடைய தலைவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து வெளியேறுவதற்கு சுமந்திரனை காரணமாக அமைந்துள்ளதாக அதன் தலைவர்கள் பகிரங்கமாகவே குற்றச்சாட்டியுள்ளனர்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேசியப் பட்டியலுக்கான  எனது பெயர் முதலாவதாக கட்சியால் குறிப்பிடப்பட்ட போதும் சுமந்திரன் அம்பிகா சற்குண நாதனின் பெயரை முதலாவதாக இருப்பதாக கூறினார்.

அந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தேசிய பட்டியல் ஆசனம் ஒன்று கிடைத்த நிலையில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட கலையரசனுக்கு விரும்பி  சுமந்திரன் பெற்றுக் கொடுக்கவில்லை.

தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு வழங்கக் கூடாது என்பதற்காக ஒரு சிலருடன் கலந்துரையாடி கலையரசனுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி பெற்றுக் கொடுக்கப்பட்டது.

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சுமந்திரன் எடுக்கும் தனிப்பட்ட தீர்மானங்களை கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பார்கள் என வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

இவ்வாறு பல்வேறு சந்தர்பங்களில் தனி ஒருவர் எடுக்க முடிவுகள் கட்சிக்குள் பாதிப்பை ஏற்படுத்திவரும்  நிலையில்  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்திற்கு தமிழ் தேசியம் சார்ந்த ஒருவர் தலைவராக வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் தேசிய அரசியலில் இருந்து விலகி தேசிய அரசியலுக்கு சென்று கொண்டிருப்பது மண்ணையும் மக்களையும் அழிக்கும் ஒரு செயற்பாடாகும் .

நான் பணம் சம்பாதிக்கவோ பதவி ஆசைக்காகவோ அரசியலுக்கு வரவில்லை எனக்கு தொழில் சட்டத்துறை இருக்கிறது தேவையான பணமும் இருக்கிறது.

என்னிடம் இருக்கும் சொத்துக்களையும் எனது தொழில் மூலம் மீட்டிய வருமானத்தையும் தமிழ் மக்களின் தேவைகளுக்காக செலவு செய்வேன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  தலைமையின் செயற்பாடுகள் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில்  தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற ஒருவரை தலைவராக்க  வேண்டும்.

தமிழ் தேசியத்தை நேசிக்காத ஒருவரை தலைவராக்க முனைந்தாள் தமிழ் கூட்டமைப்பு மற்றும் தமிழரசு கட்சியிலிருந்து விலகுவதே நான் மக்களுக்குச் செய்யும் நன்றி கடன்.

ஆகவே எனது இறுதி மூச்சு உள்ளவரை தமிழ் தேசியத்திற்காகவும் தமிழ் மண்ணுக்காகவும் என்னால் ஆன பணியை தொடர்ந்து செய்வேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

செய்தி -பு.கஜிந்தன்

No comments