யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் வாள் வெட்டு - ஒருவர் படுகாயம்!


யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை, நாவலடி - ஊரிக்காடு பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் வாள் மற்றும் கோடாரியுடன் வீடு ஒன்றிற்குள் புகுந்த இரண்டு நபர்கள் 65 வயது மதிக்கத்தக்க வயோதிபரை தாக்கியிருந்தனர்.

படுகாயமடைந்த வயோதிபர் ஊரணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவர் அயலவர்களினால் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலதிக விசாரணையை வல்வெட்டித்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

-கஜி-

No comments