ஸ்லோவாக்கியா சர்வதேச பூப்பந்தாட்டப் போட்டியில் பதக்கங்களை வென்ற ஈழத்துச் சிறுவன்!!


கடந்த செப்ரெம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் ஒக்ரோபர் 2 ஆம் திகதி வரை ஸ்லோவாக்கியா (Slovakia) நாட்டில் நடைபெற்ற 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான சர்வதேச போட்டியில்  இங்கிலாந்து நாட்டிலிருந்து தேஜா வேணுகோபால் அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.

இவர் பங்குபற்றிய அனைத்துப்போட்டிகளிலும் பதக்கங்களைப் பெற்று நம் அனைவர்க்கு பெருமை சேர்த்திருக்கின்றார். இவரை உலகத் தமிழர் பூப்பந்தாட்டப்பேரவை WTBF இங்கிலாந்துக் கிளையானது போட்டிக்கு அனுப்பியிருந்தனர்.

ஒற்றையர் ஆட்டம் - வெள்ளிப் பதக்கம்

இரட்டையர் ஆட்டம்  - வெள்ளிப் பதக்கம்

இரட்டையர் கலப்பு ஆட்டம் - வெண்கலப் பதக்கம்

உலகத் தமிழர் பூப்பந்தாட்டப்பேரவைக் குடும்பத்தினர் அனைவருடனு இணைந்து பெருமை கொள்வதுடன் அவரது எதிர்கால போட்டிகளில் இன்னும் சிறப்பான வெற்றிகளை பெற்றிடவும் வாழ்த்தி நிற்கின்றது.

No comments