யேர்மனியில் எரிவாவு சேமிப்பு 95 விழுக்காட்டில் உள்ளது - யேர்மனி சான்ஸ்சிலர்


யேர்மனியில் மாறிவரும் ஆற்றல் நிலைமைகளுக்கு அந்நாட்டின் குடிமக்கள்,நிறுவனங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் மாறினால் குளிர்காலத்தில் யேர்மனி வெற்றிபெறும் என அந்நாட்டின் சான்ஸ்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் கூறியுள்ளார்.

இன்று செவ்வாக்கிழமை பொறியியல் மாநாட்டில் கருத்துரைக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:-

இன்று உங்களுக்குச் சொல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். குடிமக்கள். நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மாறிவிட்ட சூழ்நிலைக்கு நாம் அனைவரும் தொடர்ந்து மாறினால் இந்த குளிர்காலத்தில் நாம் பாதுகாப்பாக இருப்போம்.

யேர்மனி கிட்டத்தட்ட அதன் எரிவாயு சேமிப்பு வசதிகளை 95% நிரம்பிய இலக்கில் உள்ளது என்று ஸ்கோல்ஸ் மேலும் கூறினார்.


No comments