வெனிசுலாவில் நிலச்சரிவு: 36 பேர் பலி! 56 பேரைக் காணவில்லை!!


வெனிசுலாவின் லாஸ் டெஜெரியாஸ் நகரில் நிலச்சரிவு காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 56 பேர் காணாமல் போயுள்ளனர்.

சுமார் 1,000 அவசரகால பணியாளர்கள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

நாங்கள் எங்களால் முடிந்தவரை காப்பாற்ற முயற்சிக்கிறோம், அன்புக்குரியவரை இழந்த அனைவருக்கும் எங்கள் இரங்கலைத் தெரிவிக்கிறோம் என்று துணைத் தலைவர் டெல்சி ரோட்ரிக்ஸ் கூறினார்.

ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மூன்று நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்துள்ளார்.

கொல்லப்பட்டவர்களில் இரண்டு சிறு குழந்தைகளும் உள்ளடங்குவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

No comments