நியூசிலாந்தில் கரை ஒதுங்கிய 500 பைலட் இன திமிங்கலங்கள் உயிரிழந்தன


நியூசிலாந்தில் கரை ஒதுங்கிய 500 பைலட் இன திமிங்கலங்கள் உயிரிழந்தன.

கடந்த வெள்ளிக்கிழமை சாத்தம் தீவுகளில் 250 பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய நிலையில், நேற்று மீண்டும் 240  திமிங்கலங்கள் கரை ஒதுங்கின.

அங்குள்ள கடல் பகுதியில் வசிக்கும் வெள்ளை சுறாக்களால், மீட்புப்பணியில் ஈடுபடுவோரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதால், இறந்த திமிங்கலங்களை கடலுக்கு இழுத்து செல்லும் முயற்சி கைவிடப்பட்டது.

நீரிழப்பால் திமிங்கலங்கள் உயிரிழக்கத் தொடங்கிய நிலையில், எஞ்சிய திமிங்கலங்கள் அவதியுறுவதை தடுக்கும் விதமாக, அவை கருணை கொலை செய்யப்பட்டன.

No comments