டென்மார்க் மாலதி தமிழ்க்கலைக்கூடத்தினால் நடாத்தப்பட்ட இளையோர் பட்டறை

இளையோர் பட்டறை தமிழர் வரலாறு அறிவோம் கண்காட்சி டென்மார்க்கில் கோசன்ஸ் நகரில் 29.10.2022 அன்று  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

பட்டறையில் 15 அகவை தொடக்கம் 30 அகவை வரையான 80 இற்கு மேற்பட்ட  இளையோர்கள்   கலந்து கொண்டனர். 

கண்காட்சியில் கற்காலம் தொடக்கம் தமிழர்கள் இன்று வரை சான்றுகளுடன் உயிரோட்டமாகத் தமிழர்களின் மரபை கண்முன் கொண்டு வரும் கண்காட்சியாக அமைந்தது. இது மட்டுமல்லாமல் தமிழர் வாழ்வியலுக்கு பண்டைய தமிழ் பழமொழிகள் அறிவியல் ரீதியாக வலுவூட்டியது என்பதனை ஆசிரியர்கள் நாடக  உரையாடல்கள் ஊடாக விளக்கம் கொடுத்தனர். அத்துடன்  தொல்காப்பியம் என்ற 3000 ஆண்டுகளுக்கு  மிகப்பழமையான தமிழ் நூலின் விஞ்ஞான ரீதியான பார்வைக்கு சான்றுகள் ஊடாக விளக்கம் கொடுக்கப்பட்டது.

இளையோர் மிகவும் ஆர்வமாக கண்காட்சியை   பார்வையிட்டு, தங்களுக்குரிய சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தனர். பாடநூல்களில் படித்த விடயங்களை கண்காட்சி ஊடாக பார்க்கும் பொழுது இன்னும் கூடிய விளக்கம் கிடைத்ததாக கருத்துகளை முன்வைத்தார்கள். 

ஈழத்தமழர்களின் வரலாற்றுக் கண்காட்சி நடைபெற்ற இன்றைய நாள் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாளாக கலந்துகொண்டவர்கள் மத்தியில் பேசப்பட்டது. 

இளையோர் பட்டறை தமிழர்களின் தாரகமந்திரமான “தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற கோசத்துடன் நிறைவு பெற்றது.

No comments