மலேசியாவில் ஆவணங்களின்றி பணியாற்றிய 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் நாடுகடத்தல்


கடந்த அக்டோபர் 12, 13 ஆகிய தேதிகளில் மலேசியாவின் சபா மாநிலத்தில் இருந்து இந்தோனேசியாவைச் 342 ஆவணங்களற்ற குடியேறிகள் நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர். 

இந்தோனேசிய தூதரக ஒத்துழைப்புடன் மலேசிய குடிவரவுத்துறை இந்நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கிறது. 

ஆவணங்களற்ற குடியேறிகள் அனைவரும் மலேசியாவின் தாவாவ் துறைமுகத்திலிருந்து கடல் வழியாக இந்தோனேசியாவின் நுனுகன் துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

முதல் நாள் தாவாவ் குடிவரவுத் தடுப்பு முகாமிலிருந்து 135 பேரும் இரண்டாவது நாள் கோத்தா கினபாலு, சண்டாக்கான், பாபார் ஆகிய மாவட்டங்களில் உள்ள மூன்று தடுப்பு முகாமிலிருந்து 207 பேரும் என மொத்தம் 342 பேர் நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர் என சபா குடிவரவுத்துறை இயக்குநர் சலியா ஹபிப் யூசூப் தெரிவித்திருக்கிறார். 

மலேசியாவுக்குள் நுழைவதற்கு முன்னதாக போதிய பயண ஆவணங்கள் மற்றும் வேலை உரிமங்களை கொண்டிருக்குமாறு குடியேறிகளை குடிவரவுத்துறை இயக்குநர் சலியா எச்சரித்திருக்கிறார். 

No comments